30. வாய்மை(Vaaimai) - Veracity
அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | |
துறவறவியல்(Thuravaraviyal) - Ascetic Virtue | |
வாய்மை(Vaaimai) - Veracity | |
291 | வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந் தீமை யிலாத சொலல் |
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும். Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others) | |
292 | பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் |
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும். Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault | |
293 | தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் |
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும். Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt) | |
294 | உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன் |
ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான். He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men | |
295 | மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை |
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன். He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities | |
296 | பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும் |
ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும். There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue | |
297 | பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று |
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும். If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue | |
298 | புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் |
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும். Purity of body is produced by water and purity of mind by truthfulness | |
299 | எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு |
(புறத்தில் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும். All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise | |
300 | யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற |
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை. Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness | |
Related topics:
திருக்குறள்(Thirukkural) | அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | பொருட்பால்(Porutpaal) – Wealth | காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love | அதிகாரம்(Adhigaram) | திருக்குறள்(Thirukkural) - Facts
List of topics: Tamil
No comments:
Post a Comment