Tuesday, June 28, 2016

Thirukkural - Therindhuvinaiyaatal

52. தெரிந்து வினையாடல்(Therindhuvinaiyaatal) - Selection and Employment

பொருட்பால்(Porutpaal) – Wealth
அரசியல்(Arasiyal) - Royalty
தெரிந்து வினையாடல்(Therindhuvinaiyaatal) - Selection and Employment
511 நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking
512 வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.
Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it)
513 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.
Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness
514 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.
Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed)
515 அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment
516 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it
517 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty
518 வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.
Having considered what work a man is fit for, let (the king) employ him in that work
519 வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு
மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties
520 நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly



Related topics:
திருக்குறள்(Thirukkural)   |   அறத்துப்பால்(Araththuppaal) – Virtue   |   பொருட்பால்(Porutpaal) – Wealth   |   காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love   |   அதிகாரம்(Adhigaram)   |   திருக்குறள்(Thirukkural) - Facts

List of topics: Tamil

No comments:

Post a Comment