120. தனிப்படர் மிகுதி(Thanippatarmikudhi) - The Solitary Anguish
காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love | |
கற்பியல் (Karpiyal) - The Post-marital love | |
தனிப்படர் மிகுதி(Thanippatarmikudhi) - The Solitary Anguish | |
1191 | தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி |
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார். The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ? | |
1192 | வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி |
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது. The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it | |
1193 | வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னும் செருக்கு |
காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும். The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands) | |
1194 | வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின் |
தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர். Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved | |
1195 | நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை |
நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்? He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ? | |
1196 | ஒருதலையான் இன்னாது காமங்காப் போல இருதலை யானும் இனிது |
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும். Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both | |
1197 | பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான் |
( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ? Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)? | |
1198 | வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கணார் இல் |
தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை. There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved | |
1199 | நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட் டிசையும் இனிய செவிக்கு |
யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது. Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears | |
1200 | உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு |
நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக. Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow) | |
Related topics:
திருக்குறள்(Thirukkural) | அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | பொருட்பால்(Porutpaal) – Wealth | காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love | அதிகாரம்(Adhigaram) | திருக்குறள்(Thirukkural) - Facts
List of topics: Tamil
No comments:
Post a Comment