11. செய்ந்நன்றியறிதல்(Seynnandri Aridhal) - Gratitude
அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | |
இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue | |
செய்ந்நன்றியறிதல்(Seynnandri Aridhal) - Gratitude | |
101 | செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது |
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது. (The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received | |
102 | காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது |
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும். A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world | |
103 | பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது |
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் . If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea | |
104 | தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் |
ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர். Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit | |
105 | உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து |
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure | |
106 | மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு |
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது . Forsake not the friendship of those who have been your staff in adversity Forget not be benevolence of the blameless | |
107 | எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு |
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர். (The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction | |
108 | நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று |
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம். It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted) | |
109 | கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும் |
முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும். Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred | |
110 | எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு |
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை. He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit | |
Related topics:
திருக்குறள்(Thirukkural) | அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | பொருட்பால்(Porutpaal) – Wealth | காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love | அதிகாரம்(Adhigaram) | திருக்குறள்(Thirukkural) - Facts
List of topics: Tamil
No comments:
Post a Comment