Thursday, June 30, 2016

Thirukkural - Pozhudhukantirangal

123. பொழுதுகண்டு இரங்கல்(Pozhudhukantirangal) - Lamentations at Eventide

காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love
கற்பியல் (Karpiyal) - The Post-marital love
பொழுதுகண்டு இரங்கல்(Pozhudhukantirangal) - Lamentations at Eventide
1221 மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!
Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) women
1222 புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை
மயங்கிய மாலைப்பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?
A long life to you, O dark evening! You are sightless Is your help-mate (also) as hard-hearted as mine
1223 பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்
பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.
The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow
1224 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்
காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது.
In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter
1225 காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை
யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?
O eve, why art thou foe! thou dost renew my grief
1226 மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்
மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.
Previous to my husband's departure, I know not the painful nature of evening
1227 காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening
1228 அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை
ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும் மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாகவும் வருகின்றது.
The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me)
1229 பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.
When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow
1230 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர்
( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth



Related topics:
திருக்குறள்(Thirukkural)   |   அறத்துப்பால்(Araththuppaal) – Virtue   |   பொருட்பால்(Porutpaal) – Wealth   |   காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love   |   அதிகாரம்(Adhigaram)   |   திருக்குறள்(Thirukkural) - Facts

List of topics: Tamil

No comments:

Post a Comment