54. பொச்சாவாமை(Pochchaavaamai) - Unforgetfulness
பொருட்பால்(Porutpaal) – Wealth | |
அரசியல்(Arasiyal) - Royalty | |
பொச்சாவாமை(Pochchaavaamai) - Unforgetfulness | |
531 | இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு |
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும். More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy | |
532 | பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு |
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும். Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge | |
533 | பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத் தெப்பானூ லோர்க்குந் துணிவு |
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும். Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world | |
534 | அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு |
உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை. Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess) | |
535 | முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை பின்னூ றிரங்கி விடும் |
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான். The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault | |
536 | இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்ப தில் |
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை. There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons | |
537 | அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக் கருவியாற் போற்றிச் செயின் |
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை. There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour | |
538 | புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையும் இல் |
சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை. Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births | |
539 | இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து |
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்க வேண்டும். Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy | |
540 | உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளிய துள்ளப் பெறின் |
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும். It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it | |
Related topics:
திருக்குறள்(Thirukkural) | அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | பொருட்பால்(Porutpaal) – Wealth | காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love | அதிகாரம்(Adhigaram) | திருக்குறள்(Thirukkural) - Facts
List of topics: Tamil
No comments:
Post a Comment