116. பிரிவு ஆற்றாமை(Pirivaatraamai) - Separation unendurable
காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love | |
கற்பியல் (Karpiyal) - The Post-marital love | |
பிரிவு ஆற்றாமை(Pirivaatraamai) - Separation unendurable | |
1151 | செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை |
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல். If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then | |
1152 | இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு |
அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது. His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation | |
1153 | அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான் |
அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது. As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible | |
1154 | அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க் குண்டோ தவறு |
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ. If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ? | |
1155 | ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு |
காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது. If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible | |
1156 | பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை |
பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது. Is hard, when he could stand, and of departure speak to me | |
1157 | துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை |
என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ. Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ? | |
1158 | இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும் இன்னா தினியார்ப் பிரிவு |
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது. Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover | |
1159 | தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ |
நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ. Fire burns when touched; but, like the sickness of love, can it also burn when removed ? | |
1160 | அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர் |
பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர். As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards | |
Related topics:
திருக்குறள்(Thirukkural) | அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | பொருட்பால்(Porutpaal) – Wealth | காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love | அதிகாரம்(Adhigaram) | திருக்குறள்(Thirukkural) - Facts
List of topics: Tamil
No comments:
Post a Comment