14. ஒழுக்கம் உடைமை(Ozhukkamutaimai) - The Possession of Decorum
அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | |
இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue | |
ஒழுக்கம் உடைமை(Ozhukkamutaimai) - The Possession of Decorum | |
131 | ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் |
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும். Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life | |
132 | பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை |
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும். Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid | |
133 | ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் |
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும். Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth | |
134 | மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் |
கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம். A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed | |
135 | அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு |
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும். Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness | |
136 | ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து |
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர். Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them | |
137 | ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி |
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர். From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace | |
138 | நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் |
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும். Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow | |
139 | ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் |
தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும். Those who study propriety of conduct will not speak evil, even forgetfully | |
140 | உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார் |
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர். Those who know not how to act agreeably to the world, though they have learnt many things, are still ignorant | |
Related topics:
திருக்குறள்(Thirukkural) | அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | பொருட்பால்(Porutpaal) – Wealth | காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love | அதிகாரம்(Adhigaram) | திருக்குறள்(Thirukkural) - Facts
List of topics: Tamil
No comments:
Post a Comment