22. ஒப்புரவறிதல்(Oppuravaridhal) - Duty to Society
அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | |
இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue | |
ஒப்புரவறிதல்(Oppuravaridhal) - Duty to Society | |
211 | கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு |
இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை. Benevolence seeks not a return. What does the world give back to the clouds ? | |
212 | தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு |
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும். All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence | |
213 | புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற |
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது. It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods | |
214 | ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் |
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான். He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence) He who knows them not will be reckoned among the dead | |
215 | ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு |
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது. The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank | |
216 | பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் |
ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது. The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town | |
217 | மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் |
ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது. If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease | |
218 | இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர் |
ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார். The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth | |
219 | நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யா தமைகலா வாறு |
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும். The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same | |
220 | ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து |
ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும். If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self | |
Related topics:
திருக்குறள்(Thirukkural) | அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | பொருட்பால்(Porutpaal) – Wealth | காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love | அதிகாரம்(Adhigaram) | திருக்குறள்(Thirukkural) - Facts
List of topics: Tamil
No comments:
Post a Comment