126. நிறையழிதல்(Niraiyazhidhal) - Reserve Overcome
காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love | |
கற்பியல் (Karpiyal) - The Post-marital love | |
நிறையழிதல்(Niraiyazhidhal) - Reserve Overcome | |
1251 | காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு |
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே. The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty | |
1252 | காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் |
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது. Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy | |
1253 | மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும் |
யான் காமத்தை என்னுள்ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது. I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze | |
1254 | நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம் மறையிறந்து மன்று படும் |
யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது. I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public | |
1255 | செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன் றன்று |
தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு. The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love | |
1256 | செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர் |
வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்தோ! The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent? | |
1257 | நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின் |
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம். I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me) | |
1258 | பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை |
நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ? Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness? | |
1259 | புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு |
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன். I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him! | |
1260 | நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல் |
கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ? Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so? | |
Related topics:
திருக்குறள்(Thirukkural) | அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | பொருட்பால்(Porutpaal) – Wealth | காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love | அதிகாரம்(Adhigaram) | திருக்குறள்(Thirukkural) - Facts
List of topics: Tamil
No comments:
Post a Comment