97. மானம்(Maanam) - Honour
பொருட்பால்(Porutpaal) – Wealth | |
குடியியல் (Kudiyiyal) - Miscellaneous | |
மானம்(Maanam) - Honour | |
961 | இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல் |
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும். Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death | |
962 | சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர் |
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார். Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame | |
963 | பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு |
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும். In great prosperity humility is becoming; dignity, in great adversity | |
964 | தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை |
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர். They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head | |
965 | குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின் |
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர். Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing | |
966 | புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற் றிகழ்வார்பின் சென்று நிலை |
மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன. Why follow men who scorn, and at their bidding wait? | |
967 | ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று |
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது. It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him | |
968 | மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து |
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ. For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death | |
969 | மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் |
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர். Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs | |
970 | இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழு தேத்தும் உலகு |
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள். The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity | |
Related topics:
திருக்குறள்(Thirukkural) | அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | பொருட்பால்(Porutpaal) – Wealth | காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love | அதிகாரம்(Adhigaram) | திருக்குறள்(Thirukkural) - Facts
List of topics: Tamil
No comments:
Post a Comment