128. குறிப்பறிவுறுத்தல்(Kuripparivuruththal) - The Reading of the Signs
காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love | |
கற்பியல் (Karpiyal) - The Post-marital love | |
குறிப்பறிவுறுத்தல்(Kuripparivuruththal) - The Reading of the Signs | |
1271 | கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு |
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது. Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something | |
1272 | கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது |
கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது. Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo | |
1273 | மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன் றுண்டு |
( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது. There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems | |
1274 | முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு |
அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது. There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud | |
1275 | செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன் றுடைத்து |
காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது. The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow | |
1276 | பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து |
பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும். The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love | |
1277 | தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை |
குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னமே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே! My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore | |
1278 | நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து |
எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம். It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow | |
1279 | தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது |
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும். She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly) | |
1280 | பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு |
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர். To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence | |
Related topics:
திருக்குறள்(Thirukkural) | அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | பொருட்பால்(Porutpaal) – Wealth | காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love | அதிகாரம்(Adhigaram) | திருக்குறள்(Thirukkural) - Facts
List of topics: Tamil
No comments:
Post a Comment