Tuesday, June 28, 2016

Thirukkural - Aran Valiyuruththal

4. அறன் வலியுறுத்தல்(Aran Valiyuruththal) - Assertion of the Strength of Virtue

அறத்துப்பால்(Araththuppaal) – Virtue
பாயிரவியல்(Paayiraviyal) - Prologue
அறன் வலியுறுத்தல்(Aran Valiyuruththal) - Assertion of the Strength of Virtue
31 சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?
32 அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it
33 ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
As much as possible, in every way, incessantly practise virtue
34 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show
35 அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech
36 அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.
Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend
37 அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.
The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein
38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births
39 அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise
40 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.
That is virtue which each ought to do, and that is vice which each should shun



Related topics:
திருக்குறள்(Thirukkural)   |   அறத்துப்பால்(Araththuppaal) – Virtue   |   பொருட்பால்(Porutpaal) – Wealth   |   காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love   |   அதிகாரம்(Adhigaram)   |   திருக்குறள்(Thirukkural) - Facts

List of topics: Tamil

No comments:

Post a Comment