115. அலர் அறிவுறுத்தல்(Alararivuruththal) - The Announcement of the Rumour
காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love | |
களவியல் (Kalaviyal) - The Pre-marital love | |
அலர் அறிவுறுத்தல்(Alararivuruththal) - The Announcement of the Rumour | |
1141 | அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் |
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர். My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of | |
1142 | மலரன்ன கண்ணாள் அருமை அறியா தலரெமக் கீந்ததிவ் வூர் |
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர். Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me | |
1143 | உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து |
ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது. Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already) | |
1144 | கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து |
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும். Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away | |
1145 | களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது |
காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது. As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour | |
1146 | கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று |
காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது. It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent | |
1147 | ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக நீளுமிந் நோய் |
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது. This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother | |
1148 | நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் |
அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது. To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee | |
1149 | அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார் பலர்நாண நீத்தக் கடை |
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ. When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal | |
1150 | தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கௌவை எடுக்குமிவ் வூர் |
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார். The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him) | |
Related topics:
திருக்குறள்(Thirukkural) | அறத்துப்பால்(Araththuppaal) – Virtue | பொருட்பால்(Porutpaal) – Wealth | காமத்துப்பால்(Kaamaththuppaal) – Love | அதிகாரம்(Adhigaram) | திருக்குறள்(Thirukkural) - Facts
List of topics: Tamil
No comments:
Post a Comment