Monday, February 29, 2016

Aathichoodi Sakara Varukkam

ஆத்திச்சூடி - சகர வருக்கம்

Detailed in the following format.
தமிழ் எழுத்து - Tamil Letter
தமிழ் வாக்கியம் - Quotes
விளக்கம் - Explanation
English Translation


சக்கர நெறி நில்
தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும்
Honor your Lands Constitution

சா
சான்றோர் இனத்து இரு
அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு
Associate with the noble

சி
சித்திரம் பேசேல்
பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே
Stop being paradoxical

சீ
சீர்மை மறவேல்
புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே
Remember to be righteous

சு
சுளிக்கச் சொல்லேல்
கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
Don't hurt others feelings

சூ
சூது விரும்பேல்
ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே
Don't gamble.

செ
செய்வன திருந்தச் செய்
செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்
Action with perfection

சே
சேரிடம் அறிந்து சேர்
நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு
Seek out good friends

சை
சையெனத் திரியேல்
பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
Avoid being insulted

சொ
சொற் சோர்வு படேல்
பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
Don't show fatigue in conversation

சோ
சோம்பித் திரியேல்
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே
Don't be a lazybones.
   


Related topics:
ஆத்திச்சூடி - உயிர் வருக்கம் - Aathichoodi Uyir Varukkam   |   ஆத்திச்சூடி - உயிர்மெய் வருக்கம் - Aathichoodi Uyirmei Varukkam   |   ஆத்திச்சூடி - ககர வருக்கம் - Aathichoodi Kakara Varukkam   |   ஆத்திச்சூடி - தகர வருக்கம் - Aathichoodi Takara Varukkam   |   ஆத்திச்சூடி - நகர வருக்கம் - Aathichoodi Nakara Varukkam   |   ஆத்திச்சூடி - பகர வருக்கம் - Aathichoodi Pakara Varukkam   |   ஆத்திச்சூடி - மகர வருக்கம் - Aathichoodi Makara Varukkam   |   ஆத்திச்சூடி - வகர வருக்கம் -  Aathichoodi Vakara Varukkam

List of topics: Tamil

No comments:

Post a Comment