Monday, February 29, 2016

Aathichoodi Nakara Varukkam

ஆத்திச்சூடி - நகர வருக்கம்

Detailed in the following format.
தமிழ் எழுத்து - Tamil Letter
தமிழ் வாக்கியம் - Quotes
விளக்கம் - Explanation
English Translation

நா
நாடு ஒப்பன செய்
நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்
Do nationally agreeable.

நி
நிலையில் பிரியேல்
உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே
Don't depart from good standing.

நீ
நீர் விளையாடேல்
வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே
Don't jump into a watery grave.

நு
நுண்மை நுகரேல்
நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே
Don't over snack.

நூ
நூல் பல கல்
அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி
Read lot of books.

நெ
நெற்பயிர் விளைவு செய்
நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்
Do agriculture.

நே
நேர்பட ஒழுகு
ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட
Exhibit good manners always.

நை
நைவினை நணுகேல்
பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே
Don't involve in destruction.

நொ
நொய்ய உரையேல்
பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே
Don't dabble in sleaze.

நோ
நோய்க்கு இடம் கொடேல்
மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே
Avoid unhealthy lifestyle.
   


Related topics:
ஆத்திச்சூடி - உயிர் வருக்கம் - Aathichoodi Uyir Varukkam   |   ஆத்திச்சூடி - உயிர்மெய் வருக்கம் - Aathichoodi Uyirmei Varukkam   |   ஆத்திச்சூடி - ககர வருக்கம் - Aathichoodi Kakara Varukkam   |   ஆத்திச்சூடி - சகர வருக்கம் - Aathichoodi Sakara Varukkam   |   ஆத்திச்சூடி - தகர வருக்கம் - Aathichoodi Takara Varukkam   |   ஆத்திச்சூடி - பகர வருக்கம் - Aathichoodi Pakara Varukkam   |   ஆத்திச்சூடி - மகர வருக்கம் - Aathichoodi Makara Varukkam   |   ஆத்திச்சூடி - வகர வருக்கம் -  Aathichoodi Vakara Varukkam

List of topics: Tamil

No comments:

Post a Comment