Monday, February 29, 2016

Aathichoodi Makara Varukkam

ஆத்திச்சூடி - மகர வருக்கம்

Detailed in the following format.
தமிழ் எழுத்து - Tamil Letter
தமிழ் வாக்கியம் - Quotes
விளக்கம் - Explanation
English Translation


மனம் தடுமாறேல்
எதனாலும் மனக்கலக்கம் அடையாதே
Don't vacillate.

மா
மாற்றானுக்கு இடம் கொடேல்
பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே
Don't accommodate your enemy.

மி
மிகைபடச் சொல்லேல்
சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே
Don't over dramatize.

மீ
மீதூண் விரும்பேல்
மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே
Don't be a glutton.

மு
முனைமுகத்து நில்லேல்
எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே
Don't join an unjust fight.

மூ
மூர்க்கரோடு இணங்கேல்
மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே
Don't agree with the stubborn.

மெ
மெல்லி நல்லாள் தோள்சேர்
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்
Stick with your exemplary wife.

மே
மேன்மக்கள் சொல் கேள்
நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட
Listen to men of quality.

மை
மை விழியார் மனை அகல்
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்
Dissociate from the jealous.

மொ
மொழிவது அற மொழி
சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்
Speak with clarity.

மோ
மோகத்தை முனி
நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு
Hate any desire for lust.
   


Related topics:
ஆத்திச்சூடி - உயிர் வருக்கம் - Aathichoodi Uyir Varukkam   |   ஆத்திச்சூடி - உயிர்மெய் வருக்கம் - Aathichoodi Uyirmei Varukkam   |   ஆத்திச்சூடி - ககர வருக்கம் - Aathichoodi Kakara Varukkam   |   ஆத்திச்சூடி - சகர வருக்கம் - Aathichoodi Sakara Varukkam   |   ஆத்திச்சூடி - தகர வருக்கம் - Aathichoodi Takara Varukkam   |   ஆத்திச்சூடி - நகர வருக்கம் - Aathichoodi Nakara Varukkam   |   ஆத்திச்சூடி - பகர வருக்கம் - Aathichoodi Pakara Varukkam   |   ஆத்திச்சூடி - வகர வருக்கம் -  Aathichoodi Vakara Varukkam

List of topics: Tamil

No comments:

Post a Comment